
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியபட்டினம் குப்பனூர் பகுதியில் சேலம் மத்திய திமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்கு குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சேலம் மத்திய திமுக துணை செயலாளர் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.