கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து வந்துள்ளார்.  ஆனா டை போட்டது சேராமல் தலையில் புண்ணாகி அதன்பிறகு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அதற்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று  வேலைக்கு சென்றுவிட்டு காட்டூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென விஜயா மயங்கி விழுந்துள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபகம் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.