தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நபரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் உருட்டுகட்டை மற்றும் கற்களால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.