
தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார்
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலி மனைக்கு சென்று மகேந்திரன் மது அருந்தியுள்ளார். பின்னால் மது போதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி கீழே இறங்கி மகேந்திரனை உயிருடன் மீட்டனர். காயமடைந்த மகேந்திரன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.