ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.  அதாவது சத்யா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இவர் 10 வருடத்திற்கு முன்பாகவே சென்னையை சேர்ந்த அருள் என்பவரையும், கரூரை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரையும் மற்றும் மாட்டு வியாபாரி மகனான பிரகாஷ் என்கிற நபர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் 2012 ஆம் வருடம் ராஜேஷ் என்பவரையும் திருமணம் செய்துள்ளார். அந்த நபருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படியாக 10 வருடமாக கூலி தொழிலாளி தொடங்கி அரசு அதிகாரிகள் வரை பலரையும் தன் வலையில் வீழ்த்தியுள்ளார் கல்யாண ராணி சத்யா.