ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்தியது. அதே சமயம் மும்பை அணி பெரும்பாலும் ஐபிஎல் தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் வென்றது கிடையாது என்ற சாதனையையும் வைத்துள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்து இருவது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா உட்பட முன்னணி வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தார்கள்.

கடைசி நேரத்தில் தீபக் சகர் மட்டுமே 28 ரன்கள் அடித்து அணியை காப்பாற்றினார் . 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின்  ரவிந்தரா  கடைசிவரை ஆட்டமில்லாமல் 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன்  ருதுராஜும்   53 ரன்கள் எடுத்தார். தோனி களத்தில் இறங்கினாலும் ரன் எதுவும் அடிக்கவில்லை. 19.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தோனி களமிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.