
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அவருடைய காரை ரசிகர்கள் சுற்றி வளைத்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில் நடிகர் ரஜினி தன்னுடைய கார் கண்ணாடியை இறக்கி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Seen #SuperstarRajinikanth sir in #Jaisalmer, came for #JAILER shooting @rajinikanth Love you sir… pic.twitter.com/9BGN7brJ2i
— Nirmal samuel (@nimi23) February 6, 2023