
தனது ரசிகர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
2024 ஆங்கில புத்தாண்டை நாடு முழுவதும் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் 2024 புத்தாண்டை ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த 2024 புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் கூடி இருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy New year thalaivaraepic.twitter.com/9ZLYfB2ZtO
— Ashok (@ThalaSSRajini) January 1, 2024
01/01/2024 great start with Thalaivar Dharisanam ✨💌#Vettaiyan #Thalaivar171 pic.twitter.com/T4uBj2Am5M
— R͏A͏T͏H͏E͏E͏S͏H͏ R͏A͏J͏I͏N͏I͏ ॐ+†+☪=🤘 (@realrawrathesh1) January 1, 2024