உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹாலியா பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய வாஷ் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் வீட்டிற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தார். சிறுவன் கண்ணாடி பொருள் ஒன்றுக்கு அருகே பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசு வெடித்ததால் கண்ணாடியும் வெடித்து சிதறி பறந்தது.

அந்த கண்ணாடி துகள்கள் சிறுவனை கழுத்து, தலை பகுதியில் கடுமையாக குத்தியதால் சிறுவன் படுகாயம் அடைந்தான். உடனே சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கண்ணாடி துகள்கள் சிறுவனின் குரல்வளை, தொண்டை பகுதியில் ஆழமாக புகுந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.