
கேரளாவில் சுல்பர் நிஜாஸ் என்ற 34 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியுள்ளது. இதனால் மருத்துவமனை செல்வதற்காக ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அந்த இளம் பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது. இதனால் வாந்தி எடுப்பதற்காக ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டிய நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.