
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா போகவேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதன்படி சுற்றுலா பயணத்தினை இந்தியாவிலிருந்து துவங்கிய அஜித், நாட்டின் அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தன் பயணத்தை முடித்த அஜித் அடுத்ததாக உலக சுற்றுலாவுக்காக தயாராகி வந்தார்.
அந்த வகையில் முதலாவதாக அஜித், நேபாளத்திற்கு சென்று உள்ளார். அங்கு அஜித் தன் நண்பர்களுடன் சேர்ந்து பி.எம்.டபிள்யூ பைக்கில் ரைடிங் செய்து வருகிறார். இந்நிலையில் நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து மகிழ்ந்த ரசிகர் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#AjithKumar At | Nepal Peoples😂🫶🏻❤🩹 pic.twitter.com/i5ZNNpclrD
— ⸙ꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋꠋ 👽ศʆ๑སཛ ຮ㉿🔮 ⸙ , (@Gixxer_SK) April 26, 2023