பிரபு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆனபோது ரோகிணி தியேட்டரின் முன்பாக நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான பரத்குமார் ஒரு லாரியின் மீது ஏறி நடனமாடிய போது தவறி கீழே விழுந்து முதுகு தண்டுவடம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர் பரத் குமார் இறந்ததை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாக ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பரத்குமார் இறந்ததால்தான் நடிகர் அஜித் துணியு படத்தின் வெற்றியை கூட கொண்டாடவில்லை என்றும் சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். மேலும் துணிவு படத்தை பார்க்க தியேட்டரில் அனுமதிக்காததால் தூத்துக்குடியைச் சேர்ந்த நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.