தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அஜித் நடிப்பில் கடந்த 2014 -ஆம் ஆண்டு வீரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமன்னா, வினோத் பிரபு, சஞ்சய் பாரத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

குடும்பக் கதை அம்சத்துடன் கிராமத்து ஸ்டைலில் நடித்து அஜித் பட்டையை கிளப்பியிருந்தார். வீரம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மே 1- ஆம் தேதி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஏற்கனவே விஜயின் சச்சின் திரைப்படம் ரீ-ரீலீஸ் ஆனதை மக்கள் கொண்டாடினர். தற்போது வீரம் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது.