அன்றும் இன்றும் என்றும் தெனிந்த ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருப்பவர் எம்எஸ் தோனி. இவர் மீண்டும் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறார். மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா வெளியேறிய பிறகு, 19வது ஓவரில்  18 ஆவது வீரராக தோனி களமிறங்கினார்.

அப்போது மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூச்சலிட்டு கத்தி ஆரவாரம் செய்தார்கள். இந்த சத்தம் காது கிழியும் அளவிற்கு இருந்தது என்றே சொல்லலாம்.  இந்த உற்சாகம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவும் அவருடைய பாப்புலாரிட்டியை வெளிக்காட்டி உள்ளது. அந்தநேரத்தில் அருகில் அமர்ந்திருந்த மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீதா அம்பானிக்கும் அந்த சத்தம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு கடுமையாக இருந்தது. பெரும்சத்தத்தால் தனது காதுகளை  மூடிக் கொண்டு உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது.