
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இன்றும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. குறிப்பாக நடிகர் விஜயுடன் இவருடைய ஜோடி அடித்துக் கொள்ளவே முடியாது. சமீப காலமாகவே விஜய் மற்றும் திரிஷா பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே விஜய் கல்வி விருது விழாவில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். இருந்தாலும் விஜய் மற்றும் திரிஷா விவகாரம் முற்று பெறுவது போல் அல்லாமல் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் திரிஷா கோலிவுட் நடிகர்கள் பற்றி பேசியபோது விஜயின் போன் நம்பரை எப்படி சேவ் செய்து வைத்துள்ளார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திரிஷா, விஜய்யின் நம்பவரை V என சேவ் செய்துள்ளேன்” என கூறியுள்ளார். அதே போல் தனுஷ் – D, சிம்பு- sim என சேவ் செய்து வைத்துள்ளார் எனக் கூறியுள்ளார். மேலும் அவரிடம் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் அஜித்தின் நம்பர் இல்லை என்றும் கூறியுள்ளார்.