
பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை தளபதி விஜய் நடத்தினார். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஒவ்வொருவராக விஜய் பரிசு கொடுத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மேடையில் 13 மணிநேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டிருந்ததை பலரும் பாராட்டினர்.
அதே சமயத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் தான் இந்த உதவியை செய்கிறார் என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மாணவர்களுக்கு விழா நடத்திய அதே நாளில் நடிகர் சூர்யாவும் தான் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் மாணவர்களை சந்தித்து பேசி உள்ளார். எனினும் அந்த சந்திப்பு பற்றி எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. சூர்யா கடந்த பல ஆண்டுகளாக வறுமையில் உள்ள மாணவர்களுக்கு படிக்க உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.