நடிகர் தனுஷ் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் நடந்து சென்றார்கள் . அப்போது அங்கிருந்து மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் ஓடி வந்து நாகர்ஜுனாவுடன் பேச முயற்சி செய்தபோது பாதுகாவலர் அந்த ரசிகரை கீழே தள்ளிவிட்டார் .

இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு இருந்தார் . இதனை அடுத்து இன்று மீண்டும் விமான நிலையத்திற்குச் சென்ற நாகர்ஜுனா அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.