டெல்லி சேர்ந்த சந்திரிகா தீக்ஷித் என்ற பெண் ஒருவர் தள்ளுவண்டி மூலமாக வடா பாவ் விற்பனை செய்து தினமும் 40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக் பாஸ் ஓ டி டி  3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.  நன்றாக படித்துள்ள இவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அவருக்கு ஒரு ஆசையாக இருந்தது. இதனை அடுத்து தள்ளு வண்டியில் வட பாவ் விற்க முடிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டியில் வட பாவா விற்கும் நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்கள் . இது சுவையாக தயார் செய்வதால் பொதுமக்கள் இவருக்கு வட பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் வடபாவ் விற்று கடினமாக உழைப்பதன் மூலமாக தினமும் 40,000 வரை சம்பாதிக்கிறேன். ஆனால் அதற்கு ஸ்மார்ட் போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும் .

இரண்டு வருடத்திற்கு முன்பாக தெருவோரத்தில் தள்ளு வண்டியில் சாதாரணமாக தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன். இதன் மூலமாக என்னுடைய மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.