இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் கிழார்குன்று நீர்வீழ்ச்சி இருக்கிறது. கேரளா எர்ணாகுளம் போர்டு கொச்சியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8பேர் கொண்ட குழு தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் வனத்தினுலுள்ள கிழார் குன்று நீர் வீழ்ச்சியை காண சென்றனர். மலை உச்சி பகுதி வரை வாகனம் போகும் என்பதால் அங்கு இருந்து வனத்தினுள் கூகுள் மேப் உதவியுடன் நீர் வீழ்ச்சியை நோக்கி சென்றனர். அந்த நீர்வீழ்ச்சியை காண கூகுள் மேப் உதவியுடன் சென்ற சுற்றுலா பயணிகள் வழி தவறி விட்டனர்.

இதனால் எதிர்திசையில் 4 கிலோ மீட்டர் துாரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி திரும்ப முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெகு நேரம் போராடி காயமடைந்த ஜிஜூ ஜேம்ஸ் என்பவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கூகுள் மேப் அனைத்து இடங்களிலும் உதவாது என்றும் அதை ஒரு உதவிக்காக பயன்படுத்தலாமே தவிர முழுக்க நம்பக்கூடாது எனவும் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர்.