
கும்முடிபூண்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் சிப்காட் ஒப்பந்த பணியாளர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமுடி பூண்டி அருகே எம்ஜிஆர் நகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பணியில் இருந்து வீடு திரும்பிய போது மகேஷ் மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர் சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.
சிகிச்சை அளிக்கபட்ட 10 நிமிடத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மகேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மகிழ்ச்சியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்