
நாம் வீட்டில் இருந்தபடியே செல்போன்களிலேயே இப்பொழுதெல்லாம் ரீசார்ஜ் செய்து வருகிறோம். ஒருவேளை நாம் தவறுதலாக வேறு ஒரு நபருக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து விட்டோம் என்றால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதாவது ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும்.
அதில் உள்ள ட்ரான்ஸ்ஷாக்ஷன் ஐடி, ரீசார்ஜ் செய்யப்பட்ட நம்பர் ,பணம் செலுத்தப்பட்ட நம்பர் ஆகியவற்றை நம்முடைய சிம் கார்டு நிறுவனத்திற்கு மெயில் மூலமாக அனுப்பி புகார் அளிக்கலாம். இரண்டு மூன்று நாட்களில் அவர்களிடம் இருந்து பதில் வரும். அப்போது அவர்களிடம் முறையான தகவலை நாம் சொன்னால் ரீசார்ஜ் செய்யப்பட்ட பணம் நமக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.