
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில் காதலை மையமாகக் கொண்டு காதல் காவியமாக எடுக்கப்பட்டது. 1997 ஆம் வருடம் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்றது. இந்த நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளை பாதுகாப்பதில் இவர் தன்னுடைய ஆதரவை காட்டி வருவது வழக்கம் .
இந்த நிலையில் சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளின் பாதுகாப்பையும் குறித்து அடிக்கடி பேசும் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக இந்த தவளைக்கு பிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தவளை உடலில் கரும்புள்ளிகள் மற்றும் தனித்துவமான வேறு வடிவம் போன்ற ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. இதே போல கடந்த வருடம் அக்டோபரில் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்திற்கும் “டிகாப்ரியோ” பெயரிடப்பட்டுள்ளது