தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செஞ்சி ராமச்சந்திரன் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியது. குறிப்பாக விஜய் முன்னிலையில் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால் தற்போது இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது செஞ்சி ராமச்சந்திரன் போன்ற வலிமையானவர்கள் அதிமுகவில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக கடல் போன்று ஒரு வலிமையான இயக்கம். இதனை யாராலும் உடைக்க முடியாது. செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி. இது போன்ற போலியான செய்திகளை பரப்புபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.