
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்கு நேரடியாக நுழைந்துள்ளார். அவருடைய கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நடிகர் விஜயின் முதல் பிரம்மாண்ட மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் கட்சியில் சினிமா பிரபலங்கள் பலர் இணைய ஆர்வம் காட்டுவதாக கூறப்படும் நிலையில் விஜய் அழைத்தால் தாங்கள் இணைய தயாராக இருக்கிறோம் என சிலர் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது விஜய் கட்சியில் இணைய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மற்றும் ராஜ்யசபா பதவி போன்றவைகள் வழங்கப்படாததால் பாஜக மீது ரவீந்திரநாத் அதிருப்தியில் இருக்கிறாராம். மேலும் இதனால் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விஜய் கட்சியில் இணைவதற்காக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.