
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் பேசியதாவது, தற்போது தமிழக வெற்றி கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. நமக்கு ஒவ்வொரு தொகுதிகளும் 80 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். ஆனால் அது முக்கியம் கிடையாது. நமக்கு ஒவ்வொரு ஓட்டு முக்கியம்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலைவர் தான் வேட்பாளர் என்று நினைத்து அவர் முகத்தை நினைத்து நீங்கள் உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். நம்முடைய வெற்றி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க கூடியவர்கள் நீங்கள் தான். ஏனெனில் ஒரு தொகுதியில் 200 முதல் 300 வரை அதற்கு அதிகமாக கூட பூத் கமிட்டிகள் இருக்கும்.
இந்த ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சம் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இருக்கிறார்கள்
ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியம். ஏனெனில் உங்கள் முகத்தை பார்த்தவுடன் மக்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஓட்டு போட வேண்டும். மேலும் நம்முடைய தமிழக வெற்றிக்கழகம் என்று அழைத்தது மற்ற கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது என்று கூறினார்.