
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடிகர் விஜய் தன்னுடைய கட்சி கொள்கைகளை அறிவித்த நிலையில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது கொள்கை தலைவர்களை உறுதிப்படுத்திய விஜய் அவர்களை உறுதியாக எந்த சமரசம் இன்றி பின்பற்றுவோம் என்று நிர்வாகிகளிடம் கூறினார்.
அதாவது நடிகர் விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை தலைவர்களாக வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோர்களை கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் கட்சி கொள்கைகளை கடுமையாக விமர்சித்த நிலையில் இன்று அவர் தன்னுடைய கட்சிக் கொள்கை தலைவர்களை உறுதிப்படுத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.