தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராதாரவி. இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் நடைபெற்ற கடைசி தோட்டா என்ற படத்தின் படவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் சினிமாவில் 50 வருடங்களாக நடித்து வருகிறேன். ஒருவன் இறந்த பிறகும் அவன் நடித்த படத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். எனவே நாம் இறந்தாலும் நாம் நடித்த படங்கள் மூலம் மக்கள் கண் முன்னே வந்து செல்வோம்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நடிகர் விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவேன் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலில் தடம் பதிக்கும் நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கினார். தற்போது ‌ கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் ‌ வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக விஜய் அறிவித்துள்ளார். மேலும் இவருடைய அரசியல் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.