கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக சென்னையில் இருந்து கோவை வந்த நடிகர் விஜய்க்கு தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரோடு ஷோ நடத்திய விஜய்க்கு அலைகடலென தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்ததால் கோவையே ஸ்தம்பித்து போனது.

இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ள நிலையில் அந்த இடத்திற்கு அருகே மின் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் மின் வயர் செல்வதால் அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள் அனைவரும் விலகி நிற்குமாறு எச்சரித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.