தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே விசாலைக்கு ‌ படையெடுத்து வருகிறார்கள். நடிகர் விஜயும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போது டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம், முண்டியம்பாக்கம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் உணவகங்களை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிகாலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வருவதால் அந்தப் பகுதியை பரபரப்பாக காணப்படுகிறது.