தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த மாநாடு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாளை மாலை 4 மணியளவில் வி சாலை என்ற இடத்தில் மாநாடு தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு உங்களுடைய பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் போலீசாரின் விதிமுறைகளையும் கடைபிடித்து அனைவரும் மாநாட்டுக்கு வரவேண்டும்.

மாநாட்டுக்கு வரும்போது பைக்கில் வர வேண்டாம். உங்களுடைய பாதுகாப்பு நலன் கருதி தான் நான் இதை சொல்கிறேன். அதேபோன்று வரும் வலிகளில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாத அளவுக்கு அனைவரும் வரவேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எளியபடியே நான் மாநாட்டுக்கு வருவேன். எனவே இதனை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் மாநாட்டுக்கு வரவேண்டும். நாளை நம்முடைய மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நாளை மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இன்றைய நடிகர் விஜய் மாநாடு நடைபெறும் திடலுக்கு வருவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.