
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாட்டில் வெயில் அதிகமாக இருப்பதால் 100க்கும் அதிகமான தொண்டர்கள் மயங்கி விழுந்துவிட்டனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தண்ணீருக்காக தொண்டர்கள் அங்கும் இங்குமாக அடைவது மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. அதாவது தண்ணீர் டேங்குகள் காலியான நிலையில் கழிவறையில் உள்ள தண்ணீரை கூட அவர்கள் பிடித்து குடித்தனர்.

இது குறித்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முதலில் மாநாடு நடைபெறும் போதும்தான் தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் விஜய் உத்தரவின் பெயரில் பின்னர் புஸ்ஸா ஆனந்து தண்ணீரை வழங்கினார். அப்போது தொண்டர்கள் கையேந்தி தண்ணீருக்காக நின்ற காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இது மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. மேலும் தற்போதே தண்ணீர் டேங்குகள் காலியான நிலையில், அந்த இடத்தில் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் ஒருபுறம் மாநாடு களை கட்டினாலும் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளதோடு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் தொண்டர்கள் மயங்கி விழும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.