
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு காவல்துறையினர் அனுமதி பெறப்பட்ட நிலையில் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார்.
இதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பூமி பூஜை நடைபெறும் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 4ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பூமி பூஜை நடத்தப்படுகிறது. மேலும் இந்த முதல் மாநாடு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.