
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது திமுகவை விமர்சித்தார். இதைப்போன்று பாஜகவை பற்றியும் அவர் விமர்சித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுக இறுமாப்புடன் கூறி வரும் நிலையில் மக்களே அவர்களை மைனஸ் ஆக்குவார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமிழகத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறினார். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு என்று கூறிய ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜகவை ஒழித்த நிலையில் அடுத்தது திமுக தான் என்றும் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் எனவும் ஒருமுறை வேங்கை வயலுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அவருடைய பேச்சு திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமாவளவன் நேற்று அவரை கட்சியிலிருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்து அறிவித்தார். அதன் பிறகு அறிக்கை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் ஒழிப்பேன் என்று கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ப்ளூ சட்டை மாறன் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் அவர் கோபப்பட்டு விரைவில் ராஜினாமா செய்வார். பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் அவர் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவார். ஜோலியை முடித்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு ரிட்டன் ஆவார். விஜய் அவர்களே உஷாரய்யா உஷார் ஓரம்சாரம் உஷாரு என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதேபோன்று முன்னதாக இயக்குனர் அமீரும் ஆதவ் அர்ஜுனாவின் நட்பு நல்லது கிடையாது என்று விஜயை எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சஸ்பண்ட் செய்திருப்பதால்.. அவர் கோவப்பட்டு விரைவில் ராஜினாமா செய்வார்.
பிறகு த.வெ.க.வில் ஸ்லீப்பர் செல்லாக சேர்வார். ஜோலியை முடித்த பிறகு.. மீண்டும் பழைய இடத்திற்கு ரிடர்ன் ஆவார்.
விஜய் அவர்களே.. உஷாரய்யா உஷாரு. ஓரஞ்சாரம் உஷாரு.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 9, 2024