உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல நாடுகள் முயற்சி செய்து அது தோல்வியில் தான் முடிந்தது.

இந்நிலையில் நேற்று இரவு உக்ரைன் ரஷ்யா மீது 68 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளது. ஆனால் 68 ட்ரோன்களையும் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.