சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சிதம்பரத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸ் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.