
தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற ஸ்ரெத்தா தவிசினை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. அதாவது லஞ்சம் வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரி பதவியில் அமர்த்தியதால் அவரது பதவி பறிபோனது.
இதைத் தொடர்ந்து பிச்சித் சைபான் அவரது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பியூ தாய் கட்சியை சேர்ந்த தக்சின் மகள் பேடோங்டர்ன் ஷினவித்ரா அதிக வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 37 வயதான அவர் தாய்லாந்தின் வரலாற்றில் பிரதமர் அரியணை ஏறும் இளம் தலைவர் ஆவார்.