தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர் புடவைகளை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் திண்டுக்கல்லை சேர்ந்த வீரன் என்பவரை சுந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதனை அடுத்து வீரன் மதுரையைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் அதிகமான தங்க பிஸ்கட் உள்ளது.

அதை வாங்கி நகை ஆசாரியான பாலசுப்பிரமணியம் என்பவரிடம் கொடுத்தால் புதிய டிசைனில் குறைவான விலைக்கு நகை செய்து கொடுப்பார் என வீரன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி சுந்தர் 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பல்வேறு தவணைகளாக ரேவதி, வெற்றிவேல், பாலசுப்ரமணியம், ஆகியோரின் வங்கி கணக்கு அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்களாகியும் நகை செய்து தராமல் அவர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சுந்தர் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரேவதி, அவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.