
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சமீபத்தில் விலகிய நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகினார். இப்படி அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இருக்கிற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வந்துச்சுன்னா கட்சியை விட்டு விலகிடுவாங்க. அவர்களுக்கு எந்த இடத்தில் திருப்தி இருக்கிறதோ அந்த இடத்தில் போய் சேரட்டும். அதில் எந்த சிக்கலும் இல்லை.
இதனால் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் பிரச்சனை ஏற்பட போவது இல்லை. பொதுவெளியில் தாலிய வச்சு கட்சி நடத்துறேன்னு சொல்றவங்க யாராவது ஒருத்தர கூட்டிட்டு வாங்க. குற்ளசாட்டை தெரிவித்தது யார்.? என் பெயரை சொல்லி 5 கோடி வரை வசூல் செய்திருக்காங்க. என் முகத்துக்காக வழக்கு போடாமல் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அதைப்பற்றி பேசினால் எனக்கு தகுதியாக இருக்குமா? இல்லை தரமாக இருக்குமா.? வளர்ந்து வரும் கட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையாக பேசக்கூடாது.