
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வபோது பயிற்சி விமானங்கள் பறந்து செல்லும் கடந்து. சில நாட்களுக்கும் முன்பு சாகசம் செய்தபடி மூன்று போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் சென்றது. நேற்று மதியம் பழனி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. அதிலிருந்து அதிக சத்தம் எழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்தபடி வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது ஹெலிகாப்டர் வட்டமடித்து விட்டு வேகமாக சென்றது. சிறிது நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மீண்டும் பழனி பேருந்து நிலையப் பகுதியில் ஒருமுறை வட்டமிட்டபடி சென்றதை பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.