
நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில் 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் சடலங்களை மீட்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் தரையில் விழுந்து நொறுங்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Final moment of fatal plane crash caught on camera by passenger..
Rest In Peace#RIP #Pokhara #Nepal #PlaneCrash #PokharaPlaneCrash #Indian #India #NepalPlaneCrash pic.twitter.com/BdULoQnwgz
— Dipesh Jung Sapkota🇳🇵 (@DipeshS41927926) January 15, 2023