உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை ஆற்றில் படகு சவாரி  செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் டேராடூன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.

டிஹ்ரி மாவட்டம் முநிகிரேதி காவல் நிலைய எல்லையில் உள்ள கருட் சட்டி பகுதியில் படகு சவாரி  செய்து கொண்டிருந்தபோது திடீரென புரண்டு விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் அடையாளம், படேல் நகர் பகுதியைச் சேர்ந்த சாகர் நெகி எனத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர்.

சாகர் நெகி தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் வந்திருந்தார். சிவபுரியில் இருந்து தொடங்கிய படகு சவாரியில், கருட் சட்டி பாலம் அருகே வந்தபோது பயணிகள் அனைவரும் ஆற்றின் வேகமான நீரில் அடித்துச்செலுத்தப்பட்டனர்.

வழிகாட்டி ஒருவர் மற்ற பயணிகளை மீட்ட போதும், சாகர் நெகி மயக்கம் அடைந்து இறந்தார். அவருடைய உடலில் அதிகளவில் நீர் புகுந்ததாலேயே மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ராஃப்டிங் நடவடிக்கைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.