அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்தார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இவர் மயங்கிய நிலையில், தலைமைச் செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறையில் அன்பழகனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் உள்ள எதிர்கட்சி MLAக்கள் அலுவலகத்தில் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும்வரை  பேரவை நடவடிக்கைகளில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.