
நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து அறிந்த மாநகர காவல் துணை ஆணையாளர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.