செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளின் தலையில் விழுந்த நிலையில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் ஒரு மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு 5 தையல் போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிக்கை ஒன்று அனுப்பி வைத்துள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.