
மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் வேனை வேல்முருகன் (47) என்பவர் ஓட்டி சென்றார். இந்த வேன் எட்டயபுரம் அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறியது.
இதில் சாலையில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த ஒரு பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.