
செல்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பழைய இரும்பு குடோன் செயல்படுகிறது. இந்த குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதான சாலையில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.