
வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலில் சிக்னல் விழுந்ததை அடுத்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார்.
திடீரென பிரேக் பிடிக்காததை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் இடதுபுறம் உள்ள தெருவில் பேருந்தை திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக இரு சக்கர வாகனத்தில் பாத்திர வியாபாரம் செய்யும் வியாபாரியின் மீது வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் இருந்த அனைத்து பொருட்களும் நசுங்கி சேதம் அடைந்தன. இதில் வியாபாரியின் வலது கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தெற்கு காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.