தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் தன்னுடைய பெற்றோரை சந்தித்து பேசி உள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.