பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் மெக்காவில் தரையை சுத்தம் செய்தது பாராட்டை பெற்றுள்ளது..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் தற்போது ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் கடைசி கடமை ஹஜ் யாத்திரையாகும். இப்போது பக்ரீத் பண்டிகை இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது. இந்த நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தற்போது ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார். ரிஸ்வான் எப்போதும் பக்தி வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2021 டி20 உலகக் கோப்பையின் போது, ​​அவர் மைதானத்தின் நடுவில் பிரார்த்தனை செய்தார். பின்னர், அமெரிக்காவில் எங்கோ பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​திடீரென காரை நிறுத்திவிட்டு பிளாட்பாரத்தில் பிரார்த்தனை செய்தார்.

முஹம்மது ரிஸ்வான் மிகவும் மதத்தின் மீது பற்று கொண்டவர் என்பதால் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அது கடவுளின் அருளால்தான் என பிரார்த்தனை செய்வார்.. இந்நிலையில், ஹஜ் பயணம் செய்துள்ள முஹம்மது ரிஸ்வான், மசூதியின் தரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக மக்காவில் உள்ள மசூதியை 24 மணி நேரமும் ஊழியர்கள் சுத்தம் செய்வார்கள். இந்நிலையில், அங்கு சென்ற ரிஸ்வான், ஊழியர்களிடம் பொருட்களை வாங்கி தரையை சுத்தம் செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தும், மக்காவில் முஹம்மது ரிஸ்வான் துப்புரவு பணி செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் உள்ளது. அடுத்து இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.