நடிகர் கமலஹாசன் கடைசியாக  இந்தியன் 2 படத்தில் நடித்தார். இந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. விக்ரம் படம் மூலமாக தரமான கம்பேக் கொடுத்த இவர் இந்தியன்  2 படத்தின் மூலமாக சற்று பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் மீண்டும் கம்பேக்  கொடுக்கும் முனைப்போடு தக் லைப் படத்தில் நடித்தார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.  இதற்கிடையில் கமல் அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக சென்றிருந்தார்.

அதை முடித்துவிட்டு கடந்த வருடம் இந்தியா திரும்பினார். தற்போது ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதிரடியான ஆக்ஷன் படமாக தயாராகும்  இது பட வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாம்.  இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில்  ஸ்லிம்மாக  காணப்பட்டார். உடல் எடை குறைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கமல் திடீரென உடல்நிலை குறைக்க என்ன காரணம்? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்?  படத்திற்காகவா? இல்லை சாதாரணமாகத்தான் தன் உடல் எடை குறைத்துள்ளாரா? என்று கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

“>